2015ஆம் ஆண்டு முதல் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி உயர்த்தப்படும் என கனடா அறிவித்துள்ளது.
இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா மற்றும் இந்தோனேஷியா உட்பட 72 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இதுவரையிலும் வரிச்சலுகை அளிக்கப்பட்டது.
ஆனால் 2015ஆம் ஆண்டு முதல் இந்த வரி 3 சதவிகிதம் உயர்த்தப்படும் என கனடா அறிவித்துள்ளது. இதனால் 333 மில்லியன் டொலர் இலாபம் கிடைக்கும் என அரசு கணக்கிட்டுள்ளது.
இதுகுறித்து மாண்டிரியஸ் வங்கியின் தலைமை பொருளியல் அறிஞர் டோக் போர்ட்டர் கூறுகையில், இந்த மாற்றங்களால் அமெரிக்கா மற்றும் கனடாவில் காணப்படும் விலைவாசி வேறுபாடுகள் குறையாது. இன்னும் அதிகமாகத்தான் செய்யும் என்றார்.


No comments:
Post a Comment