siruppiddy nilavarai.com navarkiri.net

March 2, 2013

நவநீதம்பிள்ளையின் மீது இலங்கை சுமத்தும் குற்றச்சாட்


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் மீது இலங்கை அரசாங்கம் சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று ஜேர்மனி தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் 22 வது அமர்வில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றிய ஜேர்மனின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் ஹான்ஸ் எச் சஹ_மெச்சர், நவநீதம்பிள்ளை ஏற்றுக்கொள்ள முடியாத விமர்சனங்களுக்கு முகங்கொடுப்பதாக குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் அமர்வின் போது அமைச்சர் மஹிந்த சமரசிங்க, நவநீதம்பிள்ளையின் மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே ஜேர்மனின் தூதுவர் தமது கருத்தை வெளியிட்டார்.

நவநீதம்பிள்ளை, இலங்கை தொடர்பில், பக்கச்சார்பான வகையில் நடந்து கொள்வதாக மஹிந்த சமரசிங்க கடுமையான வார்த்தைகளால் குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment