இலங்கையின் பணவீக்கம் குறையும் வரையில், நாணயக் கொள்கை அவசியம் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இலங்கைக்கு சென்றிருந்த சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் இதனை நேற்று கொழும்பில் வைத்து அறிவித்தனர்.
இலங்கை மத்திய வங்கியினால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட அதிக பணவீக்கத்திலேயே இலங்கை தற்போது பயணித்துக் கொண்டிருப்பதாக நிதியத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அவ்வாறான நாணயக் கொள்கை பின்பற்றப்பட்டால், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவியளிக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பொறுப்பாளர் ஜோன் நெல்ம்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 12 மாதங்களில் ஆசியாவிலேயே அதிக விலையுயர்வுகளை மேற்கொண்ட நர்டு என்ற அடிப்படையில் இலங்கை 9.8 வீத பணவீக்கத்தை கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஆப்கானிஸ்தான் கடந்த 12 மாதங்களில் 6 வீத பணவீக்கத்தையே கொண்டிருந்தது.
இந்தநிலையில் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை மத்திய வங்கி, 20 வீத பணவீக்கத்தை நாட்டில் ஏற்படுத்தியுள்ளதாக நெல்ம்ஸ் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் தற்போது உற்பத்திகள் மந்தமாக சென்று கொண்டிருக்கின்றன.
மறுபுறத்தில் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இதற்கு மத்தியில் சமநிலை பணக் கொள்கையை பேணுவது என்பது சவாலான விடயம் என்றும் நெல்ம்ஸ் குறிப்பிட்டார்


No comments:
Post a Comment