siruppiddy nilavarai.com navarkiri.net

January 20, 2013

பேஸ்புக் மூலமாக இலவச அழைப்புக்களை மேற்கொள்வதற்கு

முன்னணி சமூகவலைத்தளமாக விளங்கும் பேஸ்புக் நிறுவனம் அண்மையில் iPhone பயனர்களுக்கான இலவச அழைப்புக்களை ஏற்படுத்தும் பேஸ்புக் மெசஞ்சர் எனும் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது. நண்பர்களுடன் இலவச அழைப்புக்களை ஏற்படுத்தி மகிழ்வதற்கு பேஸ்புக் தளத்தின் சட் செய்யும் பகுதியின் வலது பக்க மேல் மூலையில் காணப்படும் ”i” எனும் ஐகானை அழுத்தி அழைப்பினை ஏற்படுத்தவேண்டிய நண்பரை தெரிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் இலவச அழைப்பிற்கான பொத்தானை அழுத்தியவுடன் உங்கள் நண்பருடன் தொடர்பு ஏற்படுத்தப்படும். இவ்வசதியினை பெற்றுக்கொள்வதற்கு உங்கள் நண்பரும் iPhone - இல் பேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை நிறுவியிருத்தல் வேண்டும்

No comments:

Post a Comment