December 26, 2012
கவர்ச்சியாக நடிக்க ஆர்வம் காட்டும் பூனம் கவுர்
விஷால்- சமீரா ஜோடியாக நடித்த 'வெடி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த பூனம் கவுர் கொலிவுட் பட வாய்ப்புகளை ஏற்று நடித்து வருகிறார்.
இவர், பல்வேறு வேடங்களில் நடித்த 'வதம்', 'கெஸ்ட்' படங்கள் விரைவில் திரைக்கு வருகின்றன.
இயக்குனர் துரை இயக்கத்தில் உருவான '6' படத்தில் இவர், நாயகன் ஷாம் உடன் இணைந்து நடித்துள்ளார்.
இது குறித்து பூனம் கூறுகையில், நாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'வதம்' படத்தில் கதாநாயகியாக வருகிறேன்.
கெஸ்ட் படத்தில் 'கேர்ள் நெக்ஸ்ட் டோர்' கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் மட்டுமே நான் நடிக்கிறேன்.
தெலுங்கில் 'ககனம்' படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்ததைத் தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வந்தன.
'6' படத்தில் வரும் அழுத்தமான கதாபாத்திரத்தை போல பாத்திரங்கள் கிடைத்தால் நடிக்க சம்மதிப்பேன்.
கதைக்கு தேவையான கவர்ச்சி பாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன் என்றும் தெலுங்கு படங்களில் நடிக்க பேசி வருகிறேன் எனவும் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment