| திங்கட்கிழமை, 08 ஒக்ரோபர் 2012,By.Rajah. |
| தலிபான் இயக்கத்தில் சேர
மறுத்த நபரின் இரண்டு குழந்தைகளையும் தலிபான்கள் சுட்டுக் கொன்றனர்.
ஜனாதிபதி ஹமீத் கர்சாய் தலைமையில், ஆப்கானிஸ்தானில் தற்போது ஜனநாயக ஆட்சி
நடந்தாலும் பல மாவட்டங்கள் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் தான் உள்ளன. ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ளது காஸ்னி மாகாணம்.இங்குள்ள ஈத்கா என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜல்மாய். பொலிஸ் அதிகாரியாக உள்ளார். இவரை தங்கள் இயக்கத்தில் சேரும் படி தலிபான்கள் வற்புறுத்தி வந்தனர். இதற்கு மறுப்புத் தெரிவித்ததால் ஜல்மாயின்(வயது 16), ஒன்பது வயது மகளையும் தலிபான்கள் நேற்று சுட்டுக் கொன்றனர். பொலிஸ் வேலையை விடாததாலும், அவர்கள் இயக்கத்தில் சேராத காரணத்தாலும் தலிபான்கள் இந்தக் கொலையை செய்துள்ளதாக ஜல்மாய் தெரிவித்து உள்ளார். ![]() |
| முகப்பு |



No comments:
Post a Comment