| செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, By.Rajah, |
| போகோ ஹரம் என்ற இஸ்லாமிய
தீவிரவாத அமைப்பு நைஜீரியாவில் ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி
அரசுப்படையினருடன் சண்டையிட்டு வருகிறது.
வடகிழக்கில் உள்ள பொடிஸ்கும் நகரில் இந்த தீவிரவாதிகள் ராணுவத்தினர் மீது
தாக்குதல் நடத்தினர். இதில் 31 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் சண்டைக்கு பொதுமக்கள் பலர் பயந்து ஓடுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த இயக்கத்திற்கு இப்பகுதி அரசியல்வாதிகள் உதவி வருவதாகவும் கூறப்படுகிறது. நைஜீரியாவின் வடக்கில் முஸ்லீம்களும் தெற்கில் கிறிஸ்தவர்களும் அதிகம் வாழுகிறார்கள். கடந்த 2010 லிருந்து வடக்கு பகுதியில் நடைபெற்று வரும் சண்டைக்கு இதுவரை 1400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ![]() |
| முகப்பு |



No comments:
Post a Comment