siruppiddy nilavarai.com navarkiri.net

January 2, 2014

வருடங்கள் கடந்தோட தொழில்நுட்பத்தின் உச்சகட்டம்

 தொழில்நுட்பத்தில் உச்சத்தை அடைந்து கொண்டிருக்கிறோம், குறிப்பாக தொழில்நுட்பத்திற்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறோம் என்றே சொல்லலாம்.
எங்கும் தொழில்நுட்பம், எதிலும் தொழில்நுட்பம் என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.
ஒவ்வொரு நிறுவனமும் மக்களை கவர்வதற்காக எண்ணற்ற வசதிகளை புகுத்திக் கொண்டே உள்ளது.
மிகப்பெரிய உலகத்தையே சின்ன கைபேசியில் அடக்கி விடலாம் என்ற நிலை வந்துவிட்டது.
கண்களினால் கணனியை இயக்கலாம்
கணனி இல்லை என்றால் உலகமே இயங்காது என்று தான் சொல்ல வேண்டும்.
கிராமங்களில் உள்ள வீடுகளில் கூட மிக எளிதாக கணனி உள்நுழைந்து விடுகிறது.
இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் கண்களின் மூலம் கணனியை இயக்கும் Tobii REX என்ற நவீன சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும் இச்சாதனம் விண்டோஸ் 8 இயங்குதளத்தில் செயற்படக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இனிமேல் கண்களினால் கணனியை இயக்கலாம்: புதிய சாதனம் அறிமுகம்
உலகின் மிகவும் மெலிதான ஸ்மார்ட் கைப்பேசி
கைபேசிகள் இல்லாம் இன்றைய இளைஞர்கள் இல்லை என்ற நிலை வந்துவிட்டது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அடிமையாக்கி விட்ட சாதனம் தான் கைபேசி.
ஒவ்வொரு நிறுவனமும் போட்டிப் போட்டுக் கொண்டு புதுத் புது தொழில்நுட்பங்களை வெளியிட்டு வருகின்றன.
குறிப்பாக சீன நிறுவனம் ஒன்றினால் Umeox X5 என்ற ஸ்மார்ட் கைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.
வெறும் 5.6 மில்லிமீற்றர் மட்டுமே தடிமன் கொண்ட இந்த கைபேசியில் அனைத்து அம்சங்களும் இருந்தது.
உலகின் மிகவும் மெலிதான ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்
அதிவேக சூப்பர் கணனி
உலகிலேயே மிக வேகமானது சீனாவின் டியான்ஹி&2 சூப்பர் கம்ப்யூட்டர் என்று அறிவித்தது ‘டாப்500’ (கம்ப்யூட்டர்களின் தரவரிசையை ஆராயும்) அமைப்பு.
இந்த சூப்பர் கம்ப்யூட்டர் ஒரு விநாடிக்கு, 33 குவாட்டிரில்லியன் கால்குலேஷன்களைப் போட்டு வியக்க வைக்கிறது.
உலகின் அதிவேக சூப்பர் கணனி அறிமுகம்
வியக்க வைக்கும் பால்வெளி அண்டம்
சூரியன், கிரகங்கள், நட்சத்திரங்கள் போன்ற எண்ணற்றவைகள் நிறைந்த ஒன்றையே பால்வளி அண்டம் என்றழைக்கின்றோம்.
இந்த ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியில் ஏராளமான முன்னேற்றங்களை அடைந்து கொண்டிருந்தோம்.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றதா என்ற ஆராய்ச்சியில் சிறப்பான முடிவுகளை எட்டிவிட்டோம் என்றே சொல்லலாம்.
அதுமட்டுமின்றி நாம் வாழும் பூமியை போன்று பால்வெளி அண்டத்தில், 1700 கோடி கிரகங்கள் இருப்பது தெரியவந்துது அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பால்வெளி அண்டத்தில் பூமியைப் போன்று 1700 கோடி கிரகங்கள்
செயற்கை மனிதன்
விண்வெளி ஆராய்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி என ஒருபுறம் இருக்க மருத்துவ துறையிலும் மனதில் நினைத்து பார்க்க முடியாத அளவு வளர்ச்சிகளை சந்தித்து வருகின்றோம்.
செயற்கையான உடல் உறுப்புகளை ஆய்வுக்கூடங்களில் உருவாக்கி, மனிதர்களுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனைகளையும் படைத்து வருகின்றனர்.
செயற்கை தசைகளை உருவாக்கி ஆராய்ச்சியா​ளர்கள் சாதனை
ரத்தம், உடல் உறுப்புகள் கொண்ட செயற்கை மனிதனை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை
மனித சிறுநீரிலிருந்து பற்கள் தயாரிப்பு
“காதுகளின் மூலம் காணலாம்” பார்வையில்லாதவர்களுக்கு ஓர் நற்செய்தி
பிழை கண்டுபிடிக்கும் புதிய பேனா
தற்போதைய காலகட்டத்தில் கடிதங்கள் எழுதும் பழக்கம் இல்லாவிட்டாலும் பேனா புழக்கம் குறைந்தபாடில்லை.
பத்திரிக்கை நிருபர்கள், சட்டத்தரனிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரின் பாக்கெட்டிலும் பேனா கண்டிப்பாக இருக்கும்.
சரி, எழுதும் போது பிழை வருவது சகஜமான விடயமே. ஆனால் அடிக்கடி பிழை வரும் பட்சத்தில் அதோகதி தான்.
இதற்கு மாற்றாக தான் வந்தது எழுத்துப் பிழைகளை கண்டறியும் பேனா.
அதிர்வுகள் மூலம் நமக்கு தகவல் தெரிவிக்கும் ஸ்மார்ட் பேனாவை ஜேர்மன் நிறுவனம் உருவாக்கியது.
எழுத்தாளர்களுக்கு ஓர் வரப்பிரசாதம்! பிழை கண்டுபிடிக்கும் புதிய பேனா அறிமுகம்
ரோபோக்களின் வளர்ச்சி
இனிவரும் காலங்களில் மனிதர்களுக்கு எந்தவித வேலையும் இருக்காது என்ற நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
அதற்கு ஏற்றாற் போல், பல்வேறு விதமான வேலைகளை செய்யக்கூடிய ரோபோக்கள் அறிமுகமாயின.
குழந்தையை போன்று உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ரோபோ
தண்ணீரில் சென்று உளவு பார்க்கும் ரோபோ
மனிதர்களின் அனைத்து வேலைகளையும் செய்யும் Humanoid Robots
கொமடி செய்யும் ரோபோ
 

No comments:

Post a Comment