siruppiddy nilavarai.com navarkiri.net

October 17, 2013

360 டிகிரியில் புகைப்படம் எடுக்கும் புதிய கமெரா


புகைப்படங்களை 360 டிகிரியில் எடுக்கக்கூடிய Ricoh Theta எனும் வயர்லெஸ் கமெரா உருவாக்கப்பட்டுள்ளது.

400 டொலர்கள் பெறுமதியான இக்கமெராவில் 4GB நினைவகம் காணப்படுகின்றது. இதன் மூலம் 1,200 படங்களை எடுக்கக்கூடிய வசதி காணப்படுகின்றது.

மேலும் 5 மெகாபிக்சல்கள் உடைய சென்சாரை கொண்டுள்ள இதன் மின்கலத்தினை ஒரு முறை சார்ஜ் செய்த பின்னர் 200 புகைப்படங்களை எடுக்க முடியும்.

இதன் வயர்லெஸ் இணைப்பு மூலம் iPhone 4S, iPhone 5 போன்றவற்றினை இணைக்கக்கூடியதாக இருக்கின்ற போதிலும் அன்ரோயிட் சாதனங்களை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment