siruppiddy nilavarai.com navarkiri.net

September 27, 2013

கைப்பேசி இயங்குதள பாவனையில் முன்னணியில்..


தற்போது ஸ்மார்ட் கைப்பேசிகளின் பாவனையானது உலகெங்கிலும் விரைவாக பரவி வருவதுடன், மக்கள் மத்தியில் பிரபலமாகியுமுள்ளது.
இதனால் பல்வேறு இயங்குதளங்களை அடிக்கடையாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை பல்வேறு நிறுவனங்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்தவண்ணம் உள்ளன.

தற்போது iOS 7, iOS 6, Android, Blackberry 10, Windows Phone 8 போன்ற இயங்குதளங்கள் அதிக பாவனையில் உள்ளன.
எனினும் இவற்றுள் எந்த இயங்குதளம் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது தொடர்பான ஆய்வு ஒன்று அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் அதிகளவில் iOS 7 இயங்குதளமும், மிகவும் குறைந்த அளவில் Windows Phone 8 இயங்குதளமும் பாவனை செய்யப்படுகின்ற தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment