siruppiddy nilavarai.com navarkiri.net

August 20, 2013

ஃப்ரிட்ஜுகளை விட அதிகளவு மின்சாரத்தை உறிஞ்சும் ஐபோன்கள்:


 
ஐபோன்கள் ஃப்ரிட்ஜுகளை விட அதிக அளவில் மின்சாரத்தை எடுத்துக் கொள்வது தற்போதைய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள பிரேக்த்ரூ இன்ஸ்டிடியூட், ஐபோன்கள் குறித்து ஆய்வொன்றை நடத்தியது.
இதில் ஆண்டுக்கு ஃப்ரிட்ஜ் 322 kWh (கிலோவாட் ஹவர்)மின்சாரத்தை பயன்படுத்துவதும், ஐபோன் 361 kWh மின்சாரத்தை பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது.
உலகளவில் மின்சாரத்தில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் 10 சதவிகிதத்தை எடுத்துக் கொள்வதுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.
தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் வயர்லெஸ் ப்ராட்பேண்ட் இந்த மின்சார பயன்பாட்டை மேலும் அதிகரிக்கும்.
தகவல் தொடர்புத் துறை நிலக்கரி மூலம் கிடைக்கும் மின்சாரத்தையே பெரிதும் நம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment