ஏனைய கணனி உற்பத்தி நிறுவனங்களுடன் போட்டி போட்டுக்கொண்டு, தனது உற்பத்திகளை அறிமுகப்படுத்திவரும் Samsung நிறுவனமானது புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக Galaxy Tab 3 10.1 எனும் டேப்லட்டினை வெளியிட்டுள்ளது.
இந்த டேப்லட் ஆனது 10.1 அங்குல அளவு மற்றும் 1280 x 800 பிக்சல்கள் ரெசொலுசன் உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.6GHz வேகத்தில் செயற்படக்கூடிய புரோசசர், பிரதான நினைவகமாக 1GB RAM என்பனவும் காணப்படுகின்றன.
இவற்றுடன் 3 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென 1.3 மெகாபிக்சல்கள் கொண்ட கமெரா போன்றனவும் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் கூகுளின் Android 4.2 Jelly Bean இயங்குதளத்தில் செயற்படவல்ல இந்த டேப்லட்டில் சேமிப்பு கொள்ளளவாக 16GB மற்றும் 32GB தரப்பட்டுள்ளன( காணொளி,இணைப்பு)
No comments:
Post a Comment