May 18, 2013
கைதிகளை விடுதலை செய்த ஏமன் நாட்டு கடத்தல்காரர்கள்
ராணுவத்துடன் நெருங்கிய தொடர்புடைய உள்ளூர் தளபதியான அப்துல் லத்தீஃப் சையது(Abdellatif Sayed) என்பவர் புதன்கிழமை அன்று, அல் - மராகிஷா(Al-Marakisha) குடிகளால் கடத்தி வைக்கப்பட்டிருந்த ஐவரும் மீட்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஏமன் நாட்டின் கடத்தல்காரர்கள் தாம் பிடித்து வைத்திருந்த செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் மூவரையும், இரண்டு எகிப்தியரையும் விடுதலைச் செய்துள்ளனர்.
சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் இருந்த சுவிஸ் மற்றும் கென்யாவினர் இருவரும், இவர்களுக்கு மொழிபெயர்ப்பில் உதவிய ஏமன் நாட்டினர் ஒருவரும் மீட்கப்பட்டதாக அறிவித்துள்ளது. இம்மூவரும் திங்களன்று ஜார் நகரத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்டனர்.
கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஏமன் நாட்டில் நூற்றுக்கணக்கானோர் இவ்வாறு கடத்தப்பட்டு பாதுகாப்பாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment