siruppiddy nilavarai.com navarkiri.net

May 15, 2013

ராணுவ அதிகாரிகள் பேச்சு வார்த்தை


 இந்திய சீனா ராணுவத்தின் பிரிகேடியர் மட்டத்திலான அதிகாரிகள் கலந்து கொண்ட பேச்சு வார்த்தை, சிக்கிம் மாநிலத்தில் உள்ள நதுலா என்னுமிடத்தில் நடைபெற்றது.
அப்போது சர்வதேச எல்லையில் அமைதி மற்றும் சமாதானம் நிலவ வேண்டும் என்று இரு தரப்பு அதிகாரிகளும் வலியுறுத்தினர்.
மேலும் இரு நாட்டு வர்த்தகக் குழுக்களும் அங்கு சந்தித்து பேசின. சுமூகமாகவும் நேசமுடனும் நடந்த அந்த பேச்சு வார்த்தையில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன.
சமீபத்தில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவிய சீன ராணுவம் அங்கு முகாமிட்டு மிரட்டியது.
பின்னர் நடந்த பேச்சு வார்த்தையை அடுத்து அங்கிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது


No comments:

Post a Comment