சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவாவில் வைக்கப்பட்டிருந்த நவரத்தினங்களால் பதிக்கப்பட்ட 1.3 மில்லியன் டொலர் மதிப்புடைய தங்க முட்டை திருடு போனது.
இதனால் சுவிஸ் எல்லைக்காவல் பகுதியில் பொலிசார் கண்டுபிடிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்துகொண்டிருந்த BMw என்ற காரை சந்தேகத்தின் பெயரில் நிறுத்தி சோதனை நடத்தியதில் அவர்களிடமிருந்து அந்த ஃபேபர்ஜி நிறுவனத்தின் தயாரிப்பான தங்க முட்டை கிடைத்தது.
இது குறித்து அவர்களிடம் விசாரித்தபொழுது, நாங்கள் அந்த முட்டையை கீழே கிடந்து எடுத்ததாகவும், சந்தையில் மலிவான விலைக்கு விற்கப் போவதாகவும் கூறியுள்ளனர்.
பொலிசார் இவர்களை நம்பவில்லை. இவர்கள் ஒரு குழுவாகச் செயல்பட்டு பொருட்களைத் திருடி கூடுதல் விலைக்கு விற்கத் திட்டமிடுவது வழக்கம் என்று பொலிசார் கருதினர்.
எனவே திருடிய பொருளை வைத்திருந்தது மற்றும் ஆயுதங்களை வைத்திருந்தது என்ற வழக்குகளின் கீழ் அந்த காரில் இருந்த மூன்று இளைஞர்களையும், பொலிசார் கைது செய்தனர். இதற்கு முன்னர் நடந்த பல்வேறு கொள்ளை வழக்குகளில் பொலிசார் இவர்களைத் தேடி வந்துள்ளனர்.
ஜெனீவாவில் உள்ள குவைத் நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் இருந்து கடந்த 2009ம் ஆண்டில் ஒரு கிலோவுக்கும் அதிகமாக தங்கத்தினாலான இந்த முட்டையை இவர்கள் கொள்ளையடித்துள்ளனர். இந்த முட்டையில் நூற்றுக்கணக்கான ரத்தினங்கள் பதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.navarkiri.com
ReplyDelete