ஃபுளோரிடாவில் ஓய்வுபெற்ற முதிய தம்பதியரைக் கொலை செய்த வழக்கில் பொலிசாருக்கு இன்னும் துப்பு கிடைக்கவில்லை.
பிரேதப் பரிசோதனை அறிக்கை இவர்கள் மூச்சுத்திணறலால் இறந்ததை உறுதிசெய்துள்ளது.
இது அர்த்தமற்ற கொலையாகத் தோன்றுகிறது என்றும் கொலைக்கான காரணமும் புரியவில்லை எனவும் காவல்துறையின் தலைமை அதிகாரி டுவேன்(Dwayne) தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து கூறிய காவலதிகாரி பொதுமக்களிடம் இக்கொலை பற்றித் தகவல்களை உடனடியாகத் தெரிவிக்கும்படி கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து அமெரிக்காவிலுள்ள க்ரைம் ஸ்டாப்பர்ஸ்(Crime Stoppers) என்ற உளவுத்துறை இக்கொலைக்காரனைக் கண்டுபிடிப்பவருக்கு 51,000 டொலர் பரிசு தொகையை அறிவித்துள்ளது.
பக்கத்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவில் கொலையான நாளில் ஒரு பெண் இந்த முதிய தம்பதியரின் வீட்டின் பின்புறமாக உள்ளே போனது பதிவாகியுள்ளது. ஆனால் அவளது முகமோ தெளிவாகத் தெரியவில்லை
No comments:
Post a Comment