உலகின் பெரும்பாலான நாடுகளில் நோயாளிகள் டொக்டர்களை தெய்வமாகவே பார்த்து பழகும் போக்குதான் நிலவுகிறது.
இந்நிலையில் இனி நோயாளிகளிடம் டொக்டர்கள் இஷ்டம் போல ரொமான்ஸில் ஈடுபடலாம், காதலிக்கலாம் என்று பிரிட்டன் மருத்துவ கவுன்சில் பச்சைக் கொடி காட்டியுள்ளது.
இது தொடர்பாக புதிய விதிமுறைகளை அது வெளியிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 22ம் திகதி வரை மட்டுமே நோயாளிகளுடன் காதல் கொள்வது, செக்ஸ் வைத்துக் கொள்வது ஆகியவற்றுக்கு உள்ள தடை நீடிக்கும். அதன் பின்னர் டொக்டர்களும் நோயாளிகளுடன் தாராளமாக காதலில் ஈடுபடலாம் என்று அறிவித்துள்ளது.
இருப்பினும் இதற்கு சில நிபந்தனைகளும் உண்டு. அதாவது முன்னாள் நோயாளிகளுடன் மட்டுமே காதலில் ஈடுபடலாம், டேட்டிங் போகலாம்
ஆனால் காதல் புரியும் நோக்குடன் நோயாளிகளாக இருப்பவர்களின் வீட்டுக்கு அடிக்கடி நோயாளியைப் பார்ப்பதற்காக என்று கூறி போகக் கூடாது. மேலும் காதல் புரிவதற்காக தொழிலை மறப்பதோ, விட்டுவிடுவதோ கூடாது.
இந்தப் புதிய விதிமுறைகள் ஏப்ரல் 22ம் திகதி முதல் அமலுக்கு வருவதால் தற்போதே நோயாளிகளுடன் காதல் கொள்ள மற்றும் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்பும் டொக்டர்களுக்கென தனி சங்கமே உருவாகி விட்டதாம்
No comments:
Post a Comment