siruppiddy nilavarai.com navarkiri.net

March 24, 2013

நோய் தொற்றுள்ள இரத்ததை மற்றவர்களுக்கு ?


சுவிட்சர்லாந்தில் தனது பதினாறு மருத்துவத் தொழில் பார்த்து வந்த 54 வயது ஆசாமி, தன்னிடம் சிகிச்சை பெற வந்த நோயாளிகளுக்கு எய்ட்ஸ் தொற்றுநோய் தாக்கிய ரத்தத்தை ஊசி மூலம் செலுத்தியதாக புகார் கூறப்பட்டதால் அவர் மீது பொலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரையில் அவர் 16 பேருக்கு, எய்ட்ஸ் நோய் தாக்கிய ரத்ததை செலுத்தியது தெரியவந்தது. அந்த 16 பேரும் எய்ட்ஸ் நோய் தாக்கத்துடன் உயிர்வாழ்கின்றனர். ஆனால் தன் மீதான புகாரை அந்த நபர் தொடர்ந்து மறுத்து வந்தார்.
இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த அந்த ஆசாமியை கோர்ட் உத்தரவின்பேரில் பொலீஸார் பிடிக்க சென்றபோது, பக்கத்து வீட்டுப் பெண் ஒருவருடன் 24 மணி நேரம் வீட்டுக்குள் இருந்துகொண்டு வெளியே வர மறுத்துள்ளதோடு துப்பாக்கியால் சுட்டுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
பின்னர் ஒரு வழியாக அவரை பிடித்த பொலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 12 ஆண்டுகள், 9 மாதம் சிறை தண்டனை விதித்து பெர்ன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment