siruppiddy nilavarai.com navarkiri.net

February 21, 2013

மீண்டும் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி, குற்றவாளி ,


அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் பலியாகிய துயர சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கனெக்டிக்கட் மாகாணத்தில் கடந்த டிசம்பர் 14ம் திகதி நடந்த துப்பாக்கி சூட்டில் 27 பேர் பலியாயினர்.
இதனால் நடைமுறையில் இருக்கும் துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக அங்கு மக்களுக்கு துப்பாக்கி வழங்கும் முறையில் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரதான நகரான லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகில் உள்ள ஆரஞ்ச் நகரில், இரண்டு நாட்களுக்கு முன் 20 வயது நபரொருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
அந்த நபர், சாலையில் காரில் வந்தவர்களை சுட்டுக் கொன்று காரை கடத்தி சென்றார்.
பின்னர் அவரை பொலிசார் துரத்தி சென்றபோது காரில் இருந்து வெளியில் வந்த அவர், தன்னை தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தார்.


 

No comments:

Post a Comment