சென்னையில் 18வது சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் வரும் டிச., 30 முதல் ஜன., 6 வரை நடக்கவுள்ளது. ரூ. 2.5 கோடி பரிசுத் தொகை கொண்ட இத்தொடரில் பங்கேற்க, 22 வீரர் நேரடியாக தேர்வு பெற்றனர். கடந்த முறை தோள்பட்டை காயம் காரணமாக தொடரில் இருந்து கடைசி நேரத்தில் விலகியவர் இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன். இம்முறை இவருக்கு "வைல்டு கார்டு' முறையில் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.
இரட்டையர் பிரிவில், சமீபத்தில் பூபதியை விட்டுப் பிரிந்த ரோகன் போபண்ணா, தனது புதிய "பார்ட்னர்' ராஜீவ் ராமுடன் இணைந்து பங்கேற்க போவதாக தெரிவித்தார்.
பெர்டிக் முதலிடம்: வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் செக் குடியரசின் தாமஸ் பெர்டிக்கிற்கு "நம்பர்-1' அந்தஸ்து தரப்பட்டது. அடுத்த மூன்று வரிசையில் டிப்சரிவிச் (செர்பியா), வாவ்ரின்கா (சுவிட்சர்லாந்து), மரின் சிலிச் (குரோஷியா) உள்ளனர்
No comments:
Post a Comment