By.Rajah.உரிய ஆவணங்கள் இன்றி கடல் வழியாக தமிழகத்திற்கு வந்த இலங்கை அகதிகளை போலீசார் கைது செய்து செங்கல்பட்டில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் வைத்து இருந்தனர். அங்கு ஏற்பட்ட பிரச்சினையால் பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமிற்கு சிலர் மாற்றப்பட்டனர்.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து பூந்தமல்லி சிறப்பு முகாமிற்கு மாற்றப்பட்ட செந்தூரன்(வயது 34)., சிறப்பு முகாம்களில் உள்ள அகதிகளை விடுதலை செய்து திறந்தவெளி முகாமிற்கு மாற்ற வேண்டும், தங்கள் மீதுள்ள வழக்குகளை முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்டு மாதம் 6–ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார்.
செந்தூரனின் உடல் நிலை மோசமானதால் சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து மீண்டும் முகாமில் கொண்டு வந்து அடைக்கப்பட்டார்.
ஆனால் அதன்பின்னரும் அவர், உண்ணாவிரதம் இருந்து வந்ததால் ஆகஸ்டு மாதம் 31–ந் தேதி செந்தூரன் மீது போலீசார் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் செப்டம்பர் மாதம் 18–ந்தேதி ஜாமீனில் விடுதலை ஆனார். இதையடுத்து தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்த செந்தூரனை செப்டம்பர் 25–ந் தேதி பூந்தமல்லி போலீசார் மீண்டும் தற்கொலை முயற்சி வழக்கின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர் உண்ணாவிரதம் இருந்து தற்கொலை முயற்சி வழக்கின் கீழ் 2 முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட செந்தூரன், ஜாமீனில் விடுதலையானார். விடுதலையான செந்தூரனை போலீசார் மீண்டும் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமிற்கு மாற்றினார்கள்
No comments:
Post a Comment