Friday 05 October2012..By.Rajah.கொழும்பு, கொம்பனி வீதியிலுள்ள குடியிருப்புக் காணிகளை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்புக்கு அதிரடிப் பதில் நடவடிக்கை ஒன்றினை மஹிந்தையர் எடுத்துள்ளார்.
மஹிந்தையரின் இந்தப் புதிய தீர்மானத்தின்படி கொழும்பின் மிக முக்கிய பிரதேசங்களில் ஒன்றான காலி வீதியில் அமைந்துள்ள சிறிலங்கா இராணுவத்துக்குச் சொந்தமான காணி இந்திய தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த இடத்தில் இந்திய நிறுவனம் நவீன விடுதி ஒன்றை நிர்மாணிக்கவுள்ளது.
கொழும்பு, கொம்பனித் தெருவில் மக்கள் குடியிருப்புகள் அமைந்துள்ள இடத்தைச் சுவீகரித்து அந்த இடத்தை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவது தொடர்பில் தொடரப்பட்ட வழக்கின் போது, குறித்த மக்கள் குடியிருப்புப் பிரதேசத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்கும் மஹிந்தையரின் தீர்மானத்துக்கு நீதிமன்றம் தடைவிதித்திருந்தமை தெரிந்ததே
No comments:
Post a Comment