siruppiddy nilavarai.com navarkiri.net

October 28, 2012

பல இலட்சம் பெறுமதியாக ஹெரோயின் நபர் ஒருவர் கைது

 
 ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2012.By.Rajah.
சுமார் 50 லட்சம் ரூபா பெறுமதியாக ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலினை அடுத்து மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நபர் அங்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து 605 கிலோகிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை 8 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவர் பொரளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டு்ள்ளார்.
இந்நபர் பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்

No comments:

Post a Comment