siruppiddy nilavarai.com navarkiri.net

October 8, 2012

சகோதரர்களை விஷம் வைத்து கொலை செய்ய முயன்ற 14 வயது சிறுமி கைது

திங்கட்கிழமை, 08 ஒக்ரோபர் 2012, By.Rajah.
உணவில் விஷம் வைத்து இரண்டு சிறுவர்களை கொலை செய்ய முயன்றதாக 14 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் ரிச்லேண்டின் புறநகர் பகுதியை சேர்ந்த 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுவர்களையே கொல்ல முயன்றதாக 14 வயது சிறுமி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் இவர்கள் அதிகளவு விஷம் கலந்த உணவை உட்கொள்ளாததால் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாக மருத்துவ அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
இச்சிறுவர்கள் 14 வயது சிறுமியின் சகோதரர்களாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்

No comments:

Post a Comment